www.bbcmirror.lk
www.asianewsplusone.com
www.sfmnewslk.com
www.Lankawebnews.lk
www.ceylonwebnews.com
මාධ්යවේදී කේ.වි.එම්.එෆ්.එච්.ෆාසිල් මහනුවර
ලෝක දුම්වැටි නිවාරණ දිනය නිමිත්තෙන් වංගුවකඩේ ප්රදේශයේ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් සාර්ථකව පැවැත්විණි. කුන්නේ පාන මඩිකේ සමාජ සංවර්ධන කමිටුව, සමෘද්ධි නිලධාරී සහ සමෘද්ධි සාමාජිකයන් එක්ව සංවිධානය කළ මෙම වැඩසටහන 2026 මැයි 31 වන ඉරිදා පස්වරු 3.30ට වංගුවකඩේ අභ්යන්තර ශාලාවේදී පැවැත්විණි.
සමාජයේ දුම්වැටි භාවිතය අවම කිරීම සහ එහි අහිතකර බලපෑම් පිළිබඳ ජනතාව දැනුවත් කිරීමේ අරමුණින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි. වැඩසටහන ආරම්භයේදී සහභාගී වූ සියලු දෙනාටම “දුම්වැටි නිවාරණය” පිළිබඳ ප්රතිඥා ලාංඡනයක් (Badge) පළඳවා දෙන ලදී.
ඉන් අනතුරුව දුම්වැටි භාවිතයෙන් ඇතිවන ශාරීරික හා මානසික සෞඛ්ය ගැටලු, සමාජයට සිදුවන අහිතකර බලපෑම් සහ පිළිකා, හෘද රෝග, පෙනහළු රෝග හා ශ්වසන ආබාධ ඇතුළු විවිධ රෝග පිළිබඳ දැනුවත් කිරීමේ දේශන පැවැත්විණි.
විශේෂයෙන් තරුණ පරපුර දුම්වැටි භාවිතයට ඇබ්බැහි වීමෙන් වැළකීමේ වැදගත්කම අවධාරණය කළ අතර, පවුල්වල ආර්ථිකය, දරුවන්ගේ අනාගතය සහ සමාජයේ සෞඛ්යයට දුම්වැටි නිසා සිදුවන බලපෑම් පිළිබඳවද පැහැදිලි කරන ලදී.
මෙම අවස්ථාවේදී දැනුවත් කිරීමේ දේශන, අදහස් හුවමාරු සහ සාකච්ඡාද පැවැත්වුණු අතර, දුම්වැටි රහිත සමාජයක් ගොඩනැගීම සඳහා සියලු දෙනා එක්ව කටයුතු කළ යුතු බව අවධාරණය කෙරිණි.
මෙම වැඩසටහනට ප්රාදේශීය සභා සභාපති නිර්මාල් හේරත් මහතා, පත්තදුම්බර ප්රාදේශීය සභා මන්ත්රී අල්-හාජ් රිනූස් ෆාරූක් මහතා සහ වංගුවකඩේ සලාම් පල්ලියේ සභාපතිතුමා විශේෂ ආරාධිතයන් ලෙස සහභාගී වී අදහස් දැක්වූහ. ඔවුන් සිය කථාවලදී සෞඛ්ය සම්පන්න සමාජයක් ගොඩනැගීම සඳහා ජනතා සහයෝගය සහ දැනුවත්භාවය අත්යවශ්ය බව පෙන්වා දුන්හඅපගේ අනාගත පරපුර ආරක්ෂා කිරීමට අදම දුම්වැටියෙන් ඉවත් වෙමු” යන ප්රතිඥාව සියලු දෙනා එක්ව ලබා ගත් අතර, දුම්වැටි රහිත සෞඛ්ය සම්පන්න සමාජයක් බිහිකිරීමේ අධිෂ්ඨානයෙන් වැඩසටහන සාර්ථකව අවසන් විය.
මෙම වැඩසටහන වංගුවකඩේ ජනතාව අතර දුම්වැටි නිවාරණය පිළිබඳ දැනුවත්භාවය තවදුරටත් ශක්තිමත් කළ අතර, සෞඛ්ය සම්පන්න අනාගතයක් උදෙසා ක්රියාත්මක වූ වැදගත් සමාජීය වැඩසටහනක් ලෙසද සැලකේ.
வங்குவகடையில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நிறைவு
வங்குவகடை,
31.05.2026
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வங்குவகடையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று சிறப்பாக நடைபெற்றது. குன்னே பான மடிகே சமூக அபிவிருத்தி குழு, சமுர்த்தி அதிகாரி மற்றும் சமுர்த்தி அங்கத்தவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, 2026 மே 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வங்குவகடை உள்ளாரங்க மண்டபத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் புகையிலைப் பயன்பாட்டை குறைப்பதற்கும், அதன் தீமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் “புகையிலை ஒழிப்பு” உறுதிமொழி அடையாளப் பதக்கம் (Badge) அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புகையிலையின் தீமைகள், அதன் காரணமாக ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள், மனநல பாதிப்புகள் மற்றும் சமூகத்தில் உருவாகும் எதிர்மறை விளைவுகள் குறித்து விரிவான விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றன.
புகையிலைப் பயன்பாடு மனித உயிருக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள், புற்றுநோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக இளம் தலைமுறையினர் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. குடும்பங்களின் பொருளாதார நிலை, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றில் புகையிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்வின் போது புகையிலை ஒழிப்பை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு உரைகள், கருத்துப் பகிர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதுடன், புகையிலை இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேச சபை தலைவர் திரு. நிர்மல் ஹேரத், பாத்ததும்பர பினதேச சபை உறுப்பினர் Al Haj ரினூஸ் பாரூக் மற்றும் வங்குவகடை சலாம் பள்ளி தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்கள் தங்களது உரைகளில், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டனர்.
மேலும், அல்ஹாஜ் A.R.M. சேகு முஹம்மது, அல்ஹாஜ் நுஸ்ரி ஸெளபர்தீன், A.M.R.R. பீன், ஆசிரியர் பாசில் பாரூக், அல்ஹாஜ் பாசில் (ரைஸ் மில் உரிமையாளர்), அல்ஹாஜ் ஆசிரியர் ஸெளபர்தீன் மற்றும் அல்ஹாஜ் உஷாம்தீன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அவர்களின் பங்களிப்பும் ஆதரவும் நிகழ்வின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக அமைந்தது.
இறுதியாக, “எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க இன்று புகையிலையை விட்டொழிப்போம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்டனர். சமூகத்தில் புகையிலை இல்லாத ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான உறுதியுடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வு வங்குவகடை மக்களிடையே புகையிலை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தியதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய சமூக முயற்சியாகவும் அமைந்தது.


