The Plantation Social Development Company (CIPs) operating in Maskeliya has been carrying out domestic violence related programs for the plantation people in the area for the past one year> and has done its experience sharing activities to civil and non-governmental organizations in Nuwaraeliya district in the past> The specific activity on 27.12.2024 is related to this Information sharing activity with stakeholders was held at Maskelia Tamara Hall.
It was attended by 100 people who are already trained violence prevention team> volunteers> government level officials> police and school principals and officers of CHIPS company and in the meeting the president of the company S.D. Ganesalingam explained the purpose of the specific program and the activities carried out so far and the importance of this activity> expectations etc. He clarified to the stakeholders. What is domestic violence, which has been carried out continuously in the past? Forms of violence and how it occurs> Plantation workers face violence> Economic violence> Violence between husband and wife> Sexual violence> Actions to be taken in relation to domestic violence and institutions to be approached for it and matters to be implemented as institutions to prevent domestic violence were clarified. .
Former High Commissioner B. Selvaraj> Police Officer> Advocate A. Selvaraj> Retired President S. P. Parameswaran and State Department officials who visited the event presented their views> What kind of issues should the victims of violence deal with and how to get protection from it? The visitors were also clarified about the reception.
Maskelia Dinakaran Special Correspondent.
மஸ்கெலியாவில் இயங்கும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) வீட்டு வன்முறை தொடர்பான வேலைத்தி ட்டங்களை கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள தோட்ட மக்களுக்கு முன்னெடுத்து வந்ததுடன்> அதன் அனுபவ பகிர்வு தொடர்பான செயற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு கடந்த காலங்களில் செய்து வந்ததுடன்> 27.12.2024 அன்று குறிப்பிட்ட செயற்பாடானது இது தொடர்புபட்ட பங்குதாரர்களுடன் தகவல் பகிர்வு நடத்தும் செயற்பாடு மஸ்கெலியா தமரா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஏற்கனவே பயிற்சி பெற்ற வன்முறை தடுப்பு குழுவினர்> தொண்டர்களாக செயற்படுபவர்கள்> அரச மட்ட அதிகாரிகள்> பொலிஸ் மற்றும் பாடசாலை அதிபர்கள் உட்பட சிப்ஸ் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள் என 100 பேர் கலந்து கொண்டதுடன் செயலமர்வில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம்> எதிர்பார்ப்புகள் போன்றவை தொடர்பாக பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தினார். தொடர்ந்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளான குடும்ப வன்முறை என்றால் என்ன? வன்முறையின் வடிவங்கள் அது எவ்வாறு நடைபெறுகின்றது> தோட்ட தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் வன்முறைகள்> பொருளாதார ரீதியாக முகம் கொடுக்கும் வன்முறைகள்> கனவன் மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற வன்முறைகள்> பாலியல் ரீதியாக நடைபெறும் வன்முறைகள்> குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்காக நாடவேண்டிய நிறுவனங்கள் மற்றும் குடும்ப வன்முறையை தடுப்பதற்காக நிறுவனங்களாக செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழிவிற்கு வருகை தந்திருந்த முன்னால் உயர்ஸ்தானிகரான ஓய்வுபெற்ற பெ.செல்வராஜ்> பொலிஸ் அதிகாரி> சட்டத்தரணி ஏ.செல்வராஜ்> ஓய்வு நிலை அதிபர் எஸ்.பி.பரமேஸ்வரன் மற்றும் அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன்> வன்முறை தொடர்பான விடயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான விடயங்களை கையாள வேண்டும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு போன்ற விடயங்களுடன் உதவிகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
No1 News Provider in Sri Lanka asianewsplusone.com sfmnewslk.com Facebook Asia News Plus One. Facebook Sfm News YouTube sfm news and asia news plus one https://chat.whatsapp.com/Knsroge4upyJzBjJLvNMQS

